[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரிட்டனில் மீண்டும் போரிஸ் ஜான்சன் ஆட்சியமைக்க வாய்ப்பு
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் இதுவரை 50 லட்சம் புத்தகங்கள் விற்பனை

50-lakhs-book-sales-in-perambalur-book-fair

பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் இதுவரை 50 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகியிருப்பதாக, அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் புதிய பேருந்தும் நிலையம் அருகே உள்ள நகராட்சித் திடலில், 5-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 29-ஆம் தேதி தொடங்கிய இந்த புத்தகத் திருவிழா, நாளை மாலை வரை நடைபெற உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் புத்தகங்கள், 120 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கலை, இலக்கியம், பண்பாடு, மொழி உள்ளிட்ட பிரிவுகளில், 5 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஏராளமான பள்ளி, மாணவ, மாணவிகள், வாசகர்கள், புத்தக திருவிழாவிற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

இன்று 9-ஆவது நாள் வரையில், 50 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகியிருப்பதாக, புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர‌கள் தெரிவித்துள்ளனர். புத்தக திருவிழாவில், நாள்தோறும், மாலை நேரங்களில், தலைசிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவும், கல்லூரி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close