[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

குரூப் 4 தேர்வுக்கு விண்ணிப்பிக்க செப்.14ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிப்பு

tnpsc-recruitment-2016-apply-for-5451-posts-before-september-14

குரூப் 4 பணியிடங்களான தட்டச்சர், இளநிலை உதவியாளர், , நில அளவர், வரைவாளர், வரித் தண்டலர் உள்ளிட்ட 5,451 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியிட்டது. இதற்காக www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் கடந்த ஒரு மாதமாக விண்ணபித்து வந்தனர்.

10 லட்சம் பேர் வரை இதுவரை விண்ணப்பித்திருப்பதாக கூறப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்.8ம் தேதி(இன்று கடைசி நாள்) என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த மூன்று தினங்களாகவே டி.என்.பி.எஸ் சி இணையதளம் மெதுவாக இயங்குவதாக புகார் எழுந்தது. ஏராளமானோர் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயன்றதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாத அளவிற்கு தேர்வர்கள் சிரமங்களை எதிர் கொண்டனர். இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சிக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததையடுத்து., குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக கால அவகாசத்தை டி.என்பிஎஸ்சி நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 14 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்த 16 ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close