[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு
  • BREAKING-NEWS நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்
  • BREAKING-NEWS புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்
  • BREAKING-NEWS புதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது
  • BREAKING-NEWS குமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை
  • BREAKING-NEWS டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்

சட்ட படிப்புகளுக்கான வயது வரம்பை ரத்து செய்யக்கோரிய வழக்கு: பார் கவுன்சிலுக்கு நோட்டீஸ்

law-college-admission-age-limit-case

சட்ட படிப்புகளில் சேர்வதற்கான வயது உச்ச வரம்பை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அகில இந்திய பார் கவுன்சில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டப் படிப்புகளுக்கென்று கடந்த 2008ம் ஆண்டின்போது விதிகள் உருவாக்கப்பட்டன. அதன்படி, 5 ஆண்டு சட்டப்படிப்புகளில் சேர பொதுப்பிரிவுக்கு 20 ஆகவும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 22 ஆகவும் வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இதேபோன்று 3 ஆண்டு படிப்பில் பொதுப்பிரிவுக்கு 30 ஆகவும், எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், வயது வரம்பினை நிர்ணயிக்க அகில இந்திய பார் கவுன்சிலுக்கு உரிமை இல்லை என்றுகூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர், இந்த வழக்கில் பதிலளிக்க அகில இந்திய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close