[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

மலைப்பாதையில் சிக்கிய கனரக லாரி: 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

heavy-truck-lorry-create-trafic

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் பகுதியில் மலைப்பாதையில் 27வது திருப்பத்தில் கனரக சரக்கு வாகனத்தை திருப்ப முடியாததால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கர்நாடகத்தில் இருந்து மக்காச்சோளம் ஏற்றிச் சென்ற கனரக சரக்கு வாகனம், திம்பம் 27 ஆவது வளைவு பாதையில் திரும்ப முயன்றபோது அதிக பாரம் காரணமாக தொடர்ந்து இயக்க முடியாமல் நின்றது. லாரியை பின்னோக்கி நகர்த்த முன்றபோது, சக்கரங்கள் மட்டும் சுழன்றன.

நீண்ட நேரமாகியும் லாரியை இயக்கமுடியாமல் அதே இடத்தில் நின்றதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இணைந்து லாரியை மெதுவாக தள்ளியபடி நகர்த்தினர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரி திரும்பியதால் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close