தமிழக-கேரள வன எல்லையை ஒட்டியுள்ள சிறுவாணி அணையின் குறுக்கே புதிய அணை கட்டும் கேரள முயற்சியை தடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
தமிழக கேரள எல்லையில் கேரளாவின் மன்னார்காடு தாலுகாவில் உள்ள அகழி என்ற இடத்தில் கேரள அரசு புதிய அணைக்கட்ட திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்துக்கேட்டு கடந்த மே 4-ஆம் தேதி தமிழக அரசின் பொதுப்பணித்துறைக்கு கேரள மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியிருந்தது.
ஆனால், ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை தமிழக அரசின் பொதுப்பணித்துறை பதிலளிக்காததால் அணை கட்ட நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த அணை கட்டும் பட்சத்தில் சிறுவாணி அணையிலிருந்து பவானி சாகருக்கு செல்லும் நீர் தடை படும் என்று கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.
அணை கட்டப்பட்டால், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீரும், பாசனமும் பாதிக்கப்படும் என்பதால் இந்த விவகாரத்தை தமிழக முதல்வரின் கவனத்திற்கு உடனடியாக எடுத்து செல்ல வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி
'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு
“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்
“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்