[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

ரூ. 5.75 கோடி ரயில் கொள்ளை விவகாரம்... ஈரோடு ரயில் நிலையத்தில் திடீர் விசாரணை

tripur-570-crore-issue

ரயிலில் 5.75 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஈரோட்டில் ரயில் ஓட்டுனர்கள் உள்ளிட்ட ஊழியர்களிடம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

கடந்த 8 ஆம் தேதி சேலத்தில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் ஐந்தேமுக்கால் கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பணம் கொண்டு செல்லப்பட்டபோது ரயில் பெட்டி நிறுத்தப்பட்ட ஈரோடு ரயில்நிலையம், பணம் ஏற்றிய சேலம் ரயில்நிலையம், உள்பட அனைத்து வழித்தடங்களிலும் உள்ள ரயில்நிலையங்களில் ஏதேனும் தடங்கள் உள்ளனவா என்பது குறித்தும் சந்தேகத்திற்கிடமான வகையில் உள்ளவர்களிடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி எஸ்.பி நாகஜோதி தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று ஈரோடு ரயில்நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ரயில்ஓட்டுனர்கள் இருவர் மற்றும் பொறியியல் பிரிவு ஊழியர் ஒருவரிடமும் சுமார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். தங்களின் விசாரணை நிலவரம் குறித்து போலீசார் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்க மறுத்துவிட்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close