[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

கன்னியாகுமரி அருகே வட்டாட்சியர் அலுவலகத்தில் மோதல்... (வீடியோ இணைப்பு)

taluk-office-clash

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில், வட்டாச்சியர் அலுவலகத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி பொருட்களை ஜப்திசெய்ய சென்றவர்களுக்கும், வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

குழித்துறை அருகே கொல்லங்கோடு கிராமத்திற்கு உட்பட்ட வல்லவிளை முதல் மார்த்தாண்டம் துறை வரை கிராமசாலை அமைக்க 1972- ஆண்டு இக்னேஷியஸ் லயோலா என்பவருக்கு சொந்தமான 54 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான தொகையை வருவாய்த்துறை வழங்காததால், அவர், குழித்துறை சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில், குழித்துறையில் உள்ள விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலக பொரு‌ட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இத‌ற்காக குழித்துறை வட்டாச்சியர் அலுவலகத்தில் பொருட்களை ஜப்தி செய்துகொண்டிருக்கும் போது வருவாய்த்துறை ஊழியர்களுடன் மோதல் ஏற்பட்டது

இதில் இருவருக்கு 4 பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனை‌யில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் சுமார் 2 மணிநேரம் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நீடித்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close