[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

அரசு ஊழியர்கள் மீதான ஊழல் விவகாரம் : புதிய அரசாணை பிறபிக்கப்பட்டதற்கான பின்னணி

the-background-of-the-tamilnadu-government-new-go

அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டுமானால், ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தமிழக அரசிடம் அனுமதி கோர வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அரசாணை பிறபிக்கப்பட்டதற்கான பின்னணி‌ காரணங்களை இப்போது பார்க்கலாம்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, தலைமைச் செயலர் உட்பட 3 பேர் கொண்ட குழுவிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற அரசாணை தமிழகத்தில் நடைமுறையில் இருந்தது. இதனை ரத்துசெய்யக்கோரி, வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2014ம் ஆண்டு வேறொரு வழக்கில் வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் குறிப்பிட்டிருந்தார். கடந்தாண்டு அக்டோப‌ர் மாதம் ‌நடைபெற்ற அந்த மனு மீதான விசாரணையில், இவ்விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து தமிழக அரசு புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், அதிகாரிகளுக்கு பின்பற்றப்படும் நடைமுறையையே அரசு ஊழியர்களுக்கும் கடைபிடிக்கும் வகையில் இந்த புதிய அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close