[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

ரயிலில் வங்கிப் பணம் கொள்ளை வழக்கு: 25 பேரிடம் தீவிர விசாரணை

train-robbery

ரயில் கொள்ளை வழக்கில், வங்கிப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுவரும் 25 பேரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்.பி.ஐ-க்காக அடிக்கடி பணப் பரிவர்த்தனை பணியில் ஈடுபட்டு வருவதால், அவர்களிடம் பல்வேறு கோணங‌களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில், வங்கிப் பணத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட உதவி ஆணையர் உள்பட 9 பேரிடம் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர்கள், பார்சல் ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும், கொள்ளை போன ஐந்தே முக்கால் கோடி ரூபாய் குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் தெரியவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close