[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேருக்கு பிப்12 வரை சிறை: இலங்கை நீதிமன்றம்

9-indian-fishermen-arrested-by-sri-lankan-navy

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன் அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் மற்றும் ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்களான மெரிஸ்டன், ஜெமினி, திலீப், மணிகண்டன் உட்பட 9 பேர் 2 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், 2‌ விசைப்படகுகளை சிறைபிடித்ததுடன், மீனவர்களையும் கைது செய்தனர். இதற்கிடையே, ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் விசைப்படகுகள் மீது ரப்பர் குண்டுகளை கொண்டு இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக அப்பகுதி மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். விசைப்படகுகள் மீதான தாக்குதலால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரையும் வரும் பிப்ரவரி 12ம் தேதி வரை யாழ்பாணம் சிறையில் அடைக்க ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close