[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஐஓசி ஏற்க வேண்டும்: ஜிகே வாசன் வலியுறுத்தல்

centre-should-take-steps-for-indian-oil-to-consider-workers-demands-says-g-k-vasan

தொழிலாளர்களின் கோரிக்கைகளை இந்திய ஆயில் நிறுவனம் நிறைவேற்ற, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்குச் சொந்தமான சமையல் எரிவாயு நிரப்பும் ஆலையில், தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார். இவர்களது போராட்டத்தால், பணிகள் பாதிக்கப்பட்டு, விநியோகஸ்தர்களுக்கு சிலிண்டர்கள் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதனால், பொதுமக்களுக்கு சிலிண்டர்கள் கிடைப்பதில், 30 நாட்கள் காலதாமதம் ஆவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், ஒரு வருடத்திற்கான 12 மானிய விலை சிலிண்டர்களை பெற முடியாத நிலை உள்ளதாகவும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதுடன், எஞ்சியுள்ள மானிய சிலிண்டர்களை அடுத்தாண்டு மானியத்துடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close