[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

அவைக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை: திமுக உறுப்பினருக்கு சபாநாயகர் எச்சரிக்கை

severe-measures-if-make-disturbance-pro-speaker-warns-dmk-member

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்களின் நடவடிக்கைக்கு சபாநாயகர் தனபால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

அமைச்சர் ஓ எஸ் மணியனின் கூறிய சர்சைக்குரிய கருத்துகளை அவைகுறிப்பிலிருந்து நீக்க வலியுறுத்தி திமுக உறுப்ப்பினர்கள் வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், திமுக உறுப்பினர்கள் அன்பழகன், ரங்கநாதன் உள்ளிட்டோர் அவையில் அநாகரிகமாக நடந்துகொண்டதாக கூறினார். அமைச்சர்கள் குறித்து திமுக உறுப்பினர்கள் அவதூறாக பேசியதாகவும் அவர் கூறினார்.

சபாநாயகர் பதவிக்கு உரிய மரியாதையை வழங்காமல்‌ திமுக உறுப்பினர்கள் தம்மை ஒருமையில் அழைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் ஆகியோர் திமுக உறுப்பினர்கள் அவையை அமைதியாக நடத்தவிடாதவாறு தூண்டிவிடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இனிமேலும் அவைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் நடந்துகொண்டால சபாநாயகருக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநயாகர் எச்சரித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close