[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

சின்னமலை-விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில்.. இறுதிக்கட்ட ஆய்வு

chennai-chinnamalai-airport-metro-railway-works-in-final-stage

சென்னையில் சின்னமலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்குவதற்கான ஆய்வில் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை சென்ரலில் இருந்து விமானம் நிலையம் வரை 23 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் சின்னமலை முதல் விமானநிலையம் வரை பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஒட்டம் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழிதடத்திற்கான பாதுகாப்பு சான்றிதழ் வழங்குவதற்காக மெட்ரோ பாதுகாப்பு அதிகாரி சுதர்சன் நாயக் நேற்று தண்டவாளத்தின் தரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று 8.3 கிலோமீட்டர் உள்ள இரண்டு பாதையிலும் நான்கு பெட்டிகள் கொண்ட இரண்டு ரயில்கள் இன்று முழு திறனுடன் இயக்கி பார்க்கப்பட்டது. மேலும் கட்டுப்பாட்டு அறை தொடர்பு மற்றும் ரயிலில் உள்ள பாதுகாப்பு அம்சங்களையும் அவர் ஆய்வு செய்யவுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close