[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

9-tamilnadu-fishermen-arrested-by-sri-lankan-navy

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன் அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் மற்றும் ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்களான மெரிஸ்டன், ஜெமினி, திலீப், மணிகண்டன் உட்பட 9 பேர் 2 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், 2‌ விசைப்படகுகளை சிறைபிடித்ததுடன், மீனவர்களையும் கைது செய்தனர்.

இதற்கிடையே, ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் விசைப்படகுகள் மீது ரப்பர் குண்டுகளை கொண்டு இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக அப்பகுதி மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். விசைப்படகுகள் மீதான தாக்குதலால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close