[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

சென்னை விமான நிலைய கண்ணாடிகள் உடையும் சம்பவம்: ஊடகங்களே பரபரப்பை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு

glass-break-at-chennai-airport-media-makes-senation

சென்னை விமான நிலையத்தில் மேற்கூரைக் கண்ணாடிகள் அடிக்கடி உடைந்து விழுவதாக ஊடகங்களே பரபரப்பை ஏற்படுத்தி வருவதாக விமானநிலைய கட்டுப்பாட்டு இயக்குநரகம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு விமானநிலைய கட்டுப்பாட்டு இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், விமான நிலையத்தில் கண்ணாடி மேற்கூரைகள் உடைந்து விழுவது தொடர்பாக சென்னை ஐஐடி மற்றும் பாசட் கட்டுமான பொறியியல் நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளது. அதில் மேற்கூரை கண்ணாடிகள் வலுவுடனேயே இருப்பதாக கூறப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

கண்ணாடிகள் உடைந்து விழுவதாக ஊடகங்களே பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் விமானநிலைய கட்டுப்பாட்டு இயக்குநரகம் குற்றம்சாட்டியுள்ளது. தனிப்பட்ட நபர்கள் ஏற்படுத்திய விபத்தின் காரணமாகவே சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க விமான நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close