[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது ராஜினாமா கடிதத்தை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பினார்
  • BREAKING-NEWS மாமல்லபுரத்தில் இந்திய கலாசார விழா நடத்துவதற்காக ரூ.75 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே தொடரும்; அரசியலில் எதுவும் நடக்கலாம் - துணை முதல்வர் ஓபிஎஸ்
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

கிருஷ்ணகிரி அருகே தனியார் பேருந்து- கண்டெய்னர் லாரி மோதி விபத்து: 7பேர் உயிரிழப்பு

private-bus-crash-with-container-lorry-near-krishnagiri-7-dead

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னாறில் தனியார் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, வருவாய்த்துறை, தீயணைக்கு மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் போக்குவரத்தை சரிசெய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரியிலிருந்து 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஓசூர் நோக்கி தனியார் பேருந்து சென்றது. அப்போது, கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலைகளில் இருந்த தடுப்புகளைத்தாண்டி எதிர் திசையில் வந்த பேருந்து மீது மோதியது.

இதில், பேருந்தின் இடது புறம் அமர்த்திருந்த 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஒரு பெண் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி ஆகிய இடங்களிலிருந்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close