[X] Close
JUST IN

வன விலங்குகளோடு செல்ஃபி சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்

tourists-interested-in-wildlife-selfies

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதி வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல், சாலை ஓரம் நடமாடும் வன விலங்குகளோடு செல்பி எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்‌.

முதுமலை வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலையோரங்களில் யானை, காட்டு எருமை, மான் உள்ளிட்ட விலங்குகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் யானை கூட்டங்கள் அதிகளவில் சாலையை கடப்பதை வழக்கமாக கொண்டுள்ளன.

இந்த நிலையில், முதுமலை வழியாக செல்லும் பயணிகள், வாகனத்தை விட்டு இறங்கி, சாலை ஓரம் நடமாடும் காட்டு எருமை, மான் உள்ளிட்ட விலங்குகளோடு செல்பி எடுக்க முற்படுகின்றனர். ஒருசில சுற்றுலா பயணிகள் வனப் பகுதிக்குள் அத்துமீறி நீண்ட தூரம் சென்று விலங்குகளை புகைப்படம் எடுப்பதோடு, செல்பியும் எடுத்துக் கொள்கின்றனர்.

எந்த நேரமும் யானைகள் சாலையை கடப்பதால், சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் வகையில் வனத்துறையினர் ரோந்து மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close