[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

காதல் திருமணத்திற்கு உதவியவர் படுகொலை: தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் விசாரணை

youth-murdered-for-helping-love-marriage-national-commission-for-scheduled-caste-welfare-enquiry

நண்பரின் காதல் திருமணத்திற்கு உதவிய இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

கடந்த 12-ஆம் தேதி மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த முத்துமாணிக்கம், அவரது நண்பர் சவுந்தரபாண்டி ஆகியோர் மீது 8 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் கொலை வெறித் தாக்குதல் நடத்தியது. இதில் முத்துமாணிக்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலில் சவுந்திரபாண்டி காயம் அடைந்தார்.

இதுதொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், கொலை செய்யப்பட்ட முத்துமாணிக்கம் வீட்டில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய உறுப்பினர்கள் இனியன், லிஸ்டர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். சவுந்தரபாண்டியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே, பழிவாங்கும் நோக்கில் கொலை நடைபெற்றதாகவும், உண்மையான குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் உயிரிழந்த முத்துமாணிக்கத்தின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close