[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

தீவிரமடைகிறது சுவாதி கொலை வழக்கு விசாரணை : நண்பர் மாலிக்கிடம் போலீசார் விசாரணை

swati-murder-case-chennai-police-investigate-malik

சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக அவரது நண்பர் மாலிக்கிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் ராம்குமாரை கைது செய்தனர். அப்போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நீதிமன்ற அனுமதியின் படி ராம்குமாரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்நிலையில், இவ்வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படும் சுவாதியின் நண்பர் மாலிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த அவரிடம், சுவாதியுடன் அவருக்கு உள்ள நட்பு மற்றும் சுவாதிக்கு ஏற்பட்ட பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சுவாதி கொலை வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close