[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

3 ஏக்கர் நிலத்திற்காக 14 வயது சிறுமி விற்பனை: 3-வது திருமணம் திருமணம் செய்த 48 வயது விவசாயி

48-year-old-farmer-married-with-14-year-old-girl-at-krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே 48 வயது விவசாயி ஒருவர் 14 வயது சிறுமியை மூன்றாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெறவுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ளது கோடாங்கியூர் மலைக்கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாதப்பன் (வயது 48). இவரது முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்ட நிலையில் இரண்டாவது மனைவி வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் விவசாயி மாதப்பன், அதே கிராமத்தைச் சேர்ந்த உளி வீரப்பா மகள் முனியம்மாவை(வயது14) திருமணம் செய்து கொண்டார். இதற்காக மாதப்பன், பெண்ணின் தந்தை உளி வீரப்பாவிற்கு 3 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளார். இந்த விஷயம் தெரியவரவே, கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் குழும தலைவர் வின்சென்ட் அங்கு ஒரு குழுவை அனுப்பி விசாரணை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில் “தேன்கனிக்கோட்டை அருகே கொட்ட மஞ்சு மலைப் பகுதியில் உள்ள கிராமங்களில் சர்வ சாதாரணமாக குழந்தைகள் திருமணம் நடந்து வருகிறது. ஏற்கனவே 9 குழந்தைகளுக்கு திருமணம் நடந்து உள்ளது. தற்போது முனியம்மா என்ற 14 வயது சிறுமிக்கும், விவசாயி மாதப்பனுக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்று உள்ளது, மாதப்பனுக்கு இது 3-வது திருமணம் ஆகும். குழந்தை திருமணம் நடைபெற்ற அந்த மலைக்கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்து உள்ளோம். இந்தக் குழுவினர் அந்த மலைக்கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்துவார்கள். விசாரணை முடிந்ததும் இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் செய்வோம்” என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close