[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் பாதிப்புக்கு பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கோர டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

புற்றுநோய் ஆராய்ச்சிகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: பத்மவிபூஷன் விருது பெற்ற மருத்துவர் சாந்தா

the-central-government-wants-to-help-cancer-research

புற்றுநோய் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மத்திய அரசு உதவ வேண்டும் என பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சாந்தா தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதில் தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த டாக்டர் சாந்தா, இந்த விருது அறிவிக்கப்பட்டது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.இது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,


இப்ப ரொம்ப சந்தோசமாகத்தான் இருக்கிறது.இந்த சந்தோசம் என்பது புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு கிடைத்த அங்கீகாரமாகவே நான் நினைக்கின்றேன்.அது மகிழ்ச்சியாக இருந்தாலும்,மேலும் எங்களுக்கு மத்திய,மாநில அரசுகளின் ஆதரவு கிடைத்தால் அது இந்த விருதை விட மிகப் பெரிய உதவியாக இருந்திருக்கும் என நான் நினைக்கிறேன்.தற்போது நூற்றில் 50 சதவீத புற்றுநோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.மீதமுள்ள சதவீதத்தை எட்ட வேண்டுமாயின் அதற்க்கு நிறைய ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாகவும்,இதற்கு மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close