[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

சென்னையில் டாஸ்மாக் பார் அதிபரை வெட்டி 100‌ சவரன் நகை கொள்ளை

100-sovereign-of-gold-theft-in-chennai-besant-nagar

சென்னை பெசன்ட்நகரில் டாஸ்மாக் பார் அதிபரை வெட்டி 100 ‌சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

கலாஷேத்ரா காலனியைச் சேர்ந்த மதியரசன், திருவான்மியூர் உள்ளிட்ட சில இடங்களில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இன்று அதிகாலை 2 மணியளவில் மதியரசன் வீட்டிற்குள் நுழைந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது.

அவரது மனைவியை மிரட்டி, பீரோ சாவியை பறித்து கொள்ளையர்கள் அதிலிருந்த 100 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பினர். இது குறித்து திருவான்மியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படுகாயமடைந்த மதியரசனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு 21 முதல் 24 வயது மட்டுமே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close