[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.
  • BREAKING-NEWS தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் ரோகித் சர்மா அசத்தல் சதம். போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிவுக்கு வந்தது முதல்நாள் ஆட்டம்
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

புதுச்சேரியில் எம்எல்ஏ-க்கள் பதவியேற்பு

puducherry-mla-s-sworn-in

புதுச்சேரியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.

காலை 9 மணி அளவில் சட்டப்பேரவையில் பதவி ஏற்கும் நிகழ்ச்சி தொடங்கியது. காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 15 பேர், திமுக எம்எல்ஏ-க்கள் 2 பேர் மற்றும் அதிமுக எம்எல்ஏ-க்கள் 4 பேர் பதவி ‌ஏற்றுக் கொண்‌டனர்.

தற்காலிக சபாநாயகர் சிவக்கொழுந்து இவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை அடுத்து 11-ஆம் தேதி வரை சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தனியாக வந்து பதவி ஏற்றனர். முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் பிற எம்எல்ஏ-க்களுக்கு தற்காலிக சபாநாயகர் சிவக்கொழுந்து பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close