[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

ரூ.10 -க்கு சாப்பாடு போடும் மதுரை ராமு தாத்தா!

meet-madurai-s-ramu-thatha-who-provides-food-under-rs-10

இந்த நாகரீக உலகம் விண்ணை முட்டும் விலைவாசி, சுயநலம் நிறைந்த சுற்றம் இவை போன்றவற்றால்தான் நிறைந்திருக்கிறது . தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும் என்பார்கள். ஆனால் தனக்கு எதுவும் வேண்டாம். பிறர் நலமே பெரிது என்று பெருமிதமான பணியைச் செய்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த முதியவர் ஒருவர்.

4 இட்லி 10 ரூபாய், 2 தோசை 10 ரூபாய், ஒரு பொங்கல் 5 ரூபாய், மதியம் சோறு, பொரியல், கூட்டு, சாம்பார், ரசம், மோர், ஊறுகாய் இவை அனைத்தும் சேர்த்து வெறும் 10 ரூபாய் மட்டுமே. இது கற்பனையல்ல, மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள வள்ளி உணவகத்தில் தான் இப்படி குறைந்த விலையில் உணவு வழங்கப்படுகிறது.

செருப்பில்லா பாதங்களுடனும், பொத்தான் இல்லா சட்டையுடனும் இருக்கும் 85 வயதான இந்த ராமு தாத்தாதான் 1967ஆம் ஆண்டு முதல் இந்த மகத்தான சேவையை செய்து வருகிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close