[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

கோகுல்ராஜ் கொலை வழக்கு: நெல்லை காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார் யுவராஜ்

gokulraj-murder-accused-yuvaraj-reports-at-tirunelveli-police-station

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள யுவராஜ், முதல் நாளாக நெல்லை டவுன் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார்.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் சிபிசிஐடி போலீசில் சரணடைந்தார். பின்பு அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த யுவராஜ் நெல்லை டவுன் காவல் நிலையத்தில் காலையும் மாலையும் கையெழுத்திட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று காலை காவல்துறை பாதுகாப்புடன் வந்த யுவராஜ் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவில் முன் இறங்கி கோபுர தரிசனம் செய்தார். பின்பு நெல்லை டவுன் காவல்நிலையத்தில் 10 மணிக்கு சட்டப்படி கையெழுத்திட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதுகாப்பு குறித்து, காவல்துறை மீது 100 சதவிகிதம் எனக்கு நம்பிக்கை உள்ளது. என்மீது போடப்பட்ட கொலை வழக்கு 100 சதவிகிதம் பொய்யானது, நீதிமன்றத்தில் அதனை நிரூபிப்போம், விஷ்ணுபிரியா கொலை என்பது ஏற்றுகொள்ள முடியாது. தற்கொலை தான், அது நிர்பந்த கொலை, எதற்கும் வளைந்து கொடுக்காத நேர்மையான அதிகாரி அவர், அரசியல் நிர்பந்தத்தின் காரணமாக சிக்கி கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இவைகளை நீதிமன்றத்தின் மூலம் சட்டப்படி வெளிக்கொணர்வோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close