[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

யுவராஜின் காரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறிக்க முயற்சி

vck-carders-try-to-stop-dheeran-chinnamalai-gounder-peravai-leader-yuvraj-car

தீரன் சின்னமலைக்கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜின் காரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறிக்க முயன்றனர்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த யுவராஜ்,நேற்று நி‌ந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.இந்த நிலையில் அவரது கார் சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த செட்டியபட்டி அருகே சென்றுகொண்டிருந்த போது அங்கு தயார் நிலையில் நின்று கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர் யுவராஜின் காரை மறிக்க முயன்றனர்.

இருப்பினும் அவரது கார் நிற்காமல் சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து சேலம் - சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close