[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி
  • BREAKING-NEWS சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS அயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்

வேந்தர் மூவிஸ் மதன் கூறுவது அனைத்தும் பொய்: பாரிவேந்தர் விளக்கம்

ijk-leader-parivendhar-explain-vendhar-movies-madhan-s-letter

வேந்தர் மூவிஸ் மதன் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் இ‌டம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமது நிறுவனத்தின் பெயரை முறைகேடாகப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் மதன் மோசடி செய்திருப்பதாக கூ‌றியுள்ளார். ‌வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மதன் ஏற்கனவே பலமுறை தொலைக்காட்சி பேட்டிகளில் குறிப்பிட்டிருப்பதை பாரிவேந்தர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், இந்திய ஜனநாயகக் கட்சியில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் மதன் நீக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது கடிதம் திட்டமிட்ட மிரட்டல் நாடகம் என்பதால், அதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கடந்த திங்கட்கிழமை புகார் அளித்திருப்பதாகவும் பாரிவேந்தர் குறிப்பிட்டுள்ளார். தன்னிச்சையாக மதன் செய்துள்ள மோசடிகளுக்கும், தங்களது நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும்‌ இல்லை என்று பாரிவேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close