[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு நிபந்தனை ஜாமீன்

gokul-raj-murder-case-accused-yuvraj-gets-conditional-bail

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யுவராஜூக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

இதுதொடர்பான வழக்கு நீதிபதி கோகுல்தாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. யுவராஜ் வெளியே சென்றால் சாட்சிகளை கலைத்து விட வாய்ப்புள்ளது என்று கூறி, அவருக்கு ஜாமீன் வழங்க சிபிசிஐடி எதிர்ப்பு தெரிவித்தது.அதேவேளையில், தாம் 6 மாதங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், தன் மீதான குற்றப்பத்திரிகையை முழுமையாக படித்து விளக்கமளிக்க வேண்டும் என்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் என யுவராஜ் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட யுவராஜூக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். மறு உத்தரவு வரும்வரை நெல்லை டவுன் காவல்நிலையத்தில், நாள்தோறும் இரு முறை கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close