[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
  • BREAKING-NEWS விருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது
  • BREAKING-NEWS சிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது
  • BREAKING-NEWS தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

உலக தமிழ் மாநாடுகளால் என்ன பயன்?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

teach-tamil-at-nominal-cost-madras-hc-tells-tamil-nadu-govt

‌தமிழை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லாமல் உலக தமிழ் மாநாடுகள் நடத்துவதால் என்ன பயன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பல கோடி ரூபாய் செலவு செய்து உலக தமிழ் மாநாடு நடத்துவதாலும், தமிழ் செம்மொழி என்று வெறுமனே கூறிக்கொள்வதாலும் எந்த பயனும் ஏற்படபோவதில்லை என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியை கற்பிக்கவும், தமிழ் குறித்து ஆராய்ச்சி செய்யவதற்குமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரைசெய்துள்ளது.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தவும் , தமிழின் பெருமையையும் புகழையும் அவர்கள் அறிந்துக்கொள்ளவும் வழிவகை செய்யவேண்டும் என நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கவும், வேறு மொழிகளில் உள்ள இலக்கியங்களை தமிழ் மொழிக்கும், தமிழ் மொழியில் உள்ள நூல்களை பிற மொழிக்கும் மொழிப்பெயர்க்க போதுமான நிதியை அரசு ஒதுக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழை அஞ்சல் வழியில் கற்பிக்க உத்தரவிடக்கோரி லஷ்மி நாராயணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன் மற்றும் கிருபாரகரன் அடங்கிய அமர்வு இதனை தெரிவித்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close