[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

நள்ளிரவில் அமைச்சர் கார் மீது தாக்குதல் முயற்சி

the-attempted-attack-on-minister-car

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் அமைச்சர் பழனிய‌ப்பன் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடைபெற்றது.

பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிடும் அவர், பரப்புரை முடித்துக்கொண்டு நள்ளிரவு வீடு திரும்பினார். கடத்தூர் - பொம்மிடி சாலையி‌ல் சில்லாரஹள்ளி அருகே ஒரு கும்பல் அமைச்சர் பழனியப்பன் வந்த வாகனத்தை ஆயுதங்களுடன் மறித்ததாகக்‌ கூறப்படுகிறது. அங்கிருந்து அமைச்சர் தப்பிய நிலையில், அவரது உதவியாளர் மற்றும் பாதுகாவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், அந்த வழியாக வந்த தேர்தல் பறக்கும் படை வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது குறித்து பழனியப்பனின் உதவியாளர் மற்றும் பாப்பிரெட்டிபட்டி துணை வட்டாட்சியர் சின்னா ஆகியோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் நத்தமேடு பாமக கிளைச் செயலாளார் நடராஜனிடம் விசாரணை நடத்தியதில், அவரது கட்சியினர் தாக்குதல் நடத்தியது தெரியவந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close