[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

மாற்றுத்திறனாளி என்பதால் மகனையே கொலை செய்த தந்தை

dad-killed-his-son-as-he-is-a-handicapped

விருதுநகர் முத்தால் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன். இவர்  இன்று தனது மனைவி பாக்கியலட்சுமி வெளியே சென்ற போது தனது மாற்றுத்திறனாளி மகன் ராகுலை அழைத்துள்ளார். மகனும் அப்பாவின் அருகே சென்றபோது, அவ்சர் வீட்டின் அருகேயுள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர்  தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் அறிந்து வந்த பாண்டியன் நகர் காவல்துறையினர் உடல்களை மீட்டு விசாரணை நடத்தியதில் 21 வயதான தனது மாற்றுத்திறனாளி மகன் ராகுலுக்கு  வாய் பேசவும்  முடியாமலும் நடக்க முடியாத நிலையிலும் வீட்டினுள்ளேயே முடங்கியிருந்த நிலையில்  முருகன் அவரை நினைந்து தொடர்ந்து மன உளைச்சலுக்குள்ளாகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மகனை எங்கும் அழைத்து செல்ல முடியாமல் , பராமரிக்க முடியாமல் இருந்ததால் மகனை கொலை செய்துவிட்டு அவரும் கொலை செய்துள்ளதாக விசரணையில் தெரிய வந்துள்ளது. தந்தையே மகனை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பு : எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை என்பதும் கொலை செய்வது என்பதும் தீர்வல்ல. கொலை செய்தால் சட்டதின் முன் தண்டிக்கப்படுவோம். தற்கொலை நம்மை கோழையாக்கும். தற்கொலை  எண்ணத்தில் இருந்து மீள பல்வேறு அமைப்புகள் பயிற்சி அளிக்கின்றன. அதனை பயன்படுத்தி வாழ்க்கையை நாமே மாற்றியமைக்கலாம் 

 

சினேகா அமைப்பு முகவரி : எண் 11, பார்க் வியூ சாலை, ராஜா அண்ணாமலை புரம், சென்னை 28.

தொடர்பு எண் : 044 - 24640050, 24640060

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close