[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

எட்டயபுரம் அருகே சாலையில் நின்ற வேன் மீது லாரி மோதல்: 9பேர் பலி

van-lorry-clash-near-ettayapuram-8-dead

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர், உறவினர்களுடன் கொண்டாயன் பச்சேரி கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, வேனில் இருக்கன்குடி திரும்பிக் கொண்டிருந்தார்.

திடீரென வேன் பழுதானதால், ‌எட்டயபுரம் அருகே தப்பாத்தி என்ற இடத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது, தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி, வேன் மீது மோதியது. இதில் வெற்றிவேல் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close