திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூரில், பணப்பட்டுவாடா செய்ததாக, திமுக வேட்பாளர் சக்கரபாணி உள்ளிட்ட 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மானூர் கனரா வங்கி அருகே இவர்கள் பரப்புரையில் ஈடுபட்டனர். பரப்புரை முடிந்த பின், பொதுமக்களை வரிசையில் நிற்கு வைத்து பணப்பட்டுவாடா செய்தனர். இந்த நிகழ்வுகளை படம்பிடித்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், வீடியோ ஆதாரத்தை, கீரனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், ஒட்டன்சத்திரம் திமுக வேட்பாளர் சக்கரபாணி, மானூர் திமுக ஊராட்சி தலைவர் முத்துப்பாண்டி, உள்ளிட்ட திமுகவினர் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை: 7 பேர் கைது..!
விடா முயற்சி, தன்னம்பிக்கை ! யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று
திமுகவில் இருந்து பழ கருப்பையா விலகல்
ஃபேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோ : திருச்சியில் ஒருவர் கைது