[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

சட்டவிரோத மதுக்கடைகள் - குடும்பத்தையே சீரழிக்கும் கொடுமை

couple-drunk-fought-with-each-other

சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலையத்திற்கு ஒரு தம்பதி ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு தகராறு  செய்து கொண்டே வந்தனர் காவல் நிலையம் வந்ததும், என்னுடைய பணத்தை எனது மனைவி எடுத்து கொண்டு தர மறுப்பதாக கணவர் போலீசாரிடம் புகார் கூறினார். பின்னர் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், இருவரும் காலையிலேயே மிக அதிக அளவில் மது அருந்தி விட்டு மது போதையில் இருப்பதையும் அறிந்த போலீசார் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்தில் இருந்து  வெளியே அனுப்பி வைத்தனர்.

வெளியே வந்த கணவன் மனைவி இருவரும் காவல் நிலையம் முன்பாக தகராறில் ஈடுபட துவங்கினர். ஒருவருக்கொருவர் ஆபாசமாகவும், அசிங்கமாகவும் பேசிக்கொண்டனர். தொடர்ந்து தனது கணவரை தாக்குவதற்காக மனைவி கல்லை எடுத்து வீசினார். மேலும், கணவரின் சட்டையை கிழித்து கல்லால் அடித்து, இருவரும் சுமார் ஒருமணிநேரம் காவல் நிலையம் முன்பாக தகராறில் ஈடுபட்டனர். மேலும், பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையிலும் நடந்து கொண்டனர். இதையறிந்த போலீசார் அவர்களை பல முறை எச்சரித்தும், அதை கேட்காமல் அங்கேயே சண்டை போட்டுக்கொண்டு ஆபாசமாக நடந்து கொண்டனர்.  

என்ன செய்வதென்று தெரியாத போலீசார், கணவனை அழைத்து பேருந்துக்கு பணம் கொடுத்து அனுப்பினர். ஆனால், போதை தலைக்கேறிய பெண் தனது கணவரை போகவிடாமல் தடுத்து தொடர்ந்து  இருவரும் வாக்குவாதம் செய்து  கல்லால் தாக்கி தகராறில் ஈடுபட்டனர். கணவன் மனைவி இருவரும் காலையிலேயே மது போதையில் தகராறில் ஈடுபட்ட சம்பவத்தை அந்த பகுதியில் இருந்த அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்தனர். தொடர்ந்து சிலர் செல்போனில் படம் பிடித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது ஓமலூர் பகுதியில் சட்டவிரோதமாக சந்துகடைகள் மூலம் 24-மணி நேரமும் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெண்களும் மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனாலேயே கணவன் மனைவி இருவரும் காலை நேரத்திலேயே மது அருந்தி வந்து காவல் நிலையம் முன்பாகவே தகராறில் ஈடுபடுவதாக கூறினர். 

குறிப்பு : மதுவுக்கு அடிமையானவர்களை கண்டால் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் உட்ன இருந்தால் போதை தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அழைத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close