[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.
  • BREAKING-NEWS தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் ரோகித் சர்மா அசத்தல் சதம். போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிவுக்கு வந்தது முதல்நாள் ஆட்டம்
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

திமுக, அதிமுக இயற்கை வளங்களை அழிக்கும் கட்சிகள்: நல்லகண்ணு

communist-nallakannu-accuses-admk-dmk

இயற்கை வளங்களை அழிப்பதில் இரு திராவிட கட்சிகளுக்குமிடையே வேறுபாடில்லை என, நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தை 50 ஆண்டுகளாக இரு திராவிட கட்சிகளும் தான் ஆண்டு வருகிறது, இரு கட்சிகளும் ஒரே நிலையில் உள்ள கொள்கையை தான் கொண்டுள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை, அவர்கள் சொன்னதும் செய்ததும் நேர்மாறாக இருந்து வருகிறது. எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டுமென்று மக்கள் உணர்ந்துள்ளனர்.

மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, தாதுமணல் கொள்ளையில் ஆட்சிக்கு வரும் போது எல்லாம் கோடி கோடியாக கொள்ளை அடிக்கிறார்கள். தற்போது பசுமை தீர்ப்பாயம் ஸ்ரிவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ள குழு அமைக்க உத்தரவிட்டது அதனை அரசு மறுத்துவிட்டது. கடந்த 2002 ஆம் ஆண்டு கேரளாவிலும், தமிழக ஆறுகளில் விதிகளை மீறி 10 அடி ஆழம் வரை மணல் அள்ளப்படுகிறது.

தமிழக ஆறுகளை பாதுகாக்க இரு திராவிட கட்சிகளும் தவறி விட்டன. பெப்சி ஆலைக்கு அதிமுக அரசு அனுமதி அளித்துள்ளன. இதற்கென தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சீவலப்பேரியில் தடுப்பனை கட்டி தேக்கப்படுகிறது. இயற்கை வளங்களை சுரண்டி விற்பனை செய்வதில் இரு கட்சிகளுக்கும் வேறுபாடில்லை அதிமுக, திமுகவிற்கு மாற்றாக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என நல்லக்கண்ணு தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close