[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன்‌ தாக்கப்பட்ட வழக்கு: காஞ்சி ஜெயேந்திரர் விடுதலை

kanchi-jayendrar-acquitted-in-auditor-radhakrishnan-assault-case

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த தொழிலதிபரும் தணிக்கையாளருமான ராதாகிருஷ்ணன், 2002ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி தாக்கப்பட்டார். காஞ்சி சங்கரமடத்தில் நடைபெறும் முறைகேடுகளை வெளியிட்டதால் அவர் ‌தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக, ஜெயேந்திரர் உள்ளிட்ட 12 பேர் மீது‌ பட்டினப்பாக்கம் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ரவி சுப்ரமணியம் காவல் துறை தரப்பு சாட்சியாக மாறினார். அப்பு, கதிரவன் என்ற இருவர் மரணமடைந்து விட்ட நிலையில், 9 பேர் மீது வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், இன்று மதியம் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, நீதிபதி அளித்த தீர்ப்பில் ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close