[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

கொள்ளை முயற்சியின் போது வெட்டப்பட்ட தனியார் நிறுவன பாதுகாவலர் உயிரிழப்பு

security-injured-during-robbery-attempt-near-kolathur-dead

சென்னை வில்லிவாக்கம் அருகே கொள்ளை முயற்சியின்போது வெட்டப்பட்ட தனியார் நிறுவ‌ன பாதுகாவலர் உயிரி‌ழந்தார்.

அண்ணா நகர், ராஜமங்கலம், வில்லிவாக்கம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வசூல் செய்த 40 லட்சம் ரூபாயை தனியார் பாதுகாப்பு நிறுவன பாதுகாவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் காரில் கொண்டு சென்றனர்.

அப்போது கொளத்தூர் செந்தில் நகர் நூறடி சாலையில் உள்ள கடையில் இருந்து பணத்தை வசூல் செய்ய காரை நிறுத்தியபோது அடையாளம் தெரியாத நபர்கள் மூவர், காரில் இருந்த‌ பாதுகாவலர் ராஜேந்திரனின் முகத்தில் மிளகாய்த்தூளை தூவிவிட்டு அரிவாளால் வெட்டி பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த ராஜேந்திரன், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார்‌ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close