[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

பொங்கலுக்கு ஊருக்குச் செல்ல மக்கள் திரண்டதால் கோயம்பேட்டில் 2ஆவது நாளாக அலைமோதிய கூட்டம்

pongal-2016-heavy-traffic-at-koyambedu-chennai

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதால் தாம்பரம் , பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் கேயம்பேட்டில் திரண்டனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பிதற்காக சுமார் ஆயிரத்து 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் சென்னையின் புறநகர் பகுதிகளான பெருங்களத்தூர் , தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவர்களும் , வாகன ஓட்டிகளுகம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இதற்கிடையே, சென்னை கோயம்பேட்டில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற ஊர்களுக்கு பேருந்துகளை இயக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் சிலர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். திருச்சி, மதுரை போன்ற ஊர்களுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறி சுமார் 50க்கும் மேற்பட்டோர் கோயம்பேட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களுக்கு பேருந்து ஏற்பாடு செய்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close