[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

சேலம்: ஓமலூர் பகுதியில் புழுக்கள் தாக்குதலால் மஞ்சள் செடிகள் பாதிப்பு

worms-attack-damage-by-garlic-plants

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில், மஞ்சள் செடிகளில் பச்சை புழுக்கள் தாக்குதலால், சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. காமலாபுரம், தும்பிபாடி, காடையாம்பட்டி, சரக்கப்பிள்ளையூர், மோரூர், பூசாரிபட்டி உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மஞ்சள் பயிரிட்டுள்ளனர்.

தற்போது மஞ்சள் செடிகளில் பச்சை புழுக்கள் கடுமையாக தாக்கியுள்ளதால், மஞ்சள் கிழங்கு அழுகி நன்றாக வளரவில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

இதனால் பொங்கல் பண்டிகையின் போது மஞ்சள் சாகுபடி அதிகளவில் இருக்காது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மஞ்சள் விவசாயத்தை காப்பாற்ற வேளாண்மை அதிகாரிகள் மஞ்சள் தோட்டத்தை ஆய்வு செய்து ஆலோசனை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close