[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

தேர்தலில் வாக்களிக்க கூடாது: கிராம மக்களை எச்சரித்த மாவோயிஸ்ட்கள்?

don-t-vote-maoist-warning-village-people

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே 7 மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வந்து தேர்தலி‌ல் வாக்களிக்கக் கூடாது என கிராம மக்களை எச்சரித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மஞ்சக்கம்பை பகுதிக்கு அடுத்துள்ள நெடுங்கல் கோம்பை கிராமத்தில் குரும்பர் இன ஆதிவாசிகள் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் இன்று அதிகாலை மூன்று பெண்கள் உள்ளிட்ட 7 மாவோயிஸ்ட்கள் வந்து தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தியதாகவும்,‌ வனத்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆதிவாசி கிராமத்திற்கு மாவோயிஸ்ட்கள் வருவது இதுவே முதன்முறையாகும். இதனைத் தொடர்ந்து ஐஜி ஸ்ரீதர் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close