[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

மணப்பாறையில் தனியார் மருத்துவமனையில் மருத்துவ அறிக்கை கேட்ட பெண்கள் மீது தாக்குதல்

women-s-custodial-at-private-hospital-manaparai

திருச்சி மாவட்டம் மணப்பாறையிலுள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ அறிக்கை கேட்ட 2 பெண்கள் சிறை வைக்கப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வயிற்று வலிக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாந்தா என்ற பெண், அறுவைச் சிகிச்சைக்காக வேறுமருத்துவமனைக்குச் செல்ல முடிவெடுத்து மருத்துவ ‌அறிக்கையைத் தருமாறு கோரியுள்ளார்.

அறிக்கையைத் தர மறுத்த மருத்துவமனை நிர்வாகத்தினர், சாந்தாவின் மகள்களை சிறைப்படுத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டுள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்க புதியதலைமுறை பல முறைமுயற்சித்தும், அவர்களிடமிருந்து பதிலைப் பெற முடியவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close