[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

புதுச்சேரி அரசு வழங்கிய மிக்ஸி, கிரைண்டர்களை உடைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போராட்டம்.

puducherry-assembly-adjourns-sine-die-after-adopting-vote-on-account-bill

புதுச்சேரியில் அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச மிக்ஸி, கிரைண்டர்கள் தரமற்றவையாக இருப்பதாகக் கூறி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அவற்றை சட்டப்பேரவை வாயிலருகே போட்டு உடைத்து போரட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி 13வது சட்டப்பேரவையின் கடைசிக் கூட்டத்தொடர் இன்று நடைற்றது. இதில் கலந்துகொள்ள வந்த அதிமுக எம்எல்ஏ ஓம் சக்தி சேகர், அவையில் பேச அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி வாயில் துணியை கட்டிக்கொண்டு கூட்டத்தில் கலந்துகொண்டார். புதுச்சேரி நிதித்துறையை தம்வசம் வைத்துள்ள முதலமைச்சர் ரங்கசாமி அடுத்த ஆறு மாத காலத்திற்கான அரசு செலவினங்களுக்கான பிரேரணையை தாக்கல் செய்தார். அதில் பல்வேறு செலவினங்களுக்காக 3,550 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட பிரேரணை மீது பேச அனுமதியளிக்கும்படி காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்ததால் ஐந்து காங்கி‌ரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதே நேரம் அந்த கட்சியைச் சேர்ந்த தேனி ஜெயக்குமார் மற்றும் திருமுருகன் ஆகியோர் மட்டும் அவையிலேயே இருந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்துவிட்டதாக அறிவிக்கவேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதற்கிடையில் அவையிலிருந்து வெளிநடப்புச் செயத 5 உறுப்பினர்களும் அரசு வழங்கிய இலவச மிக்ஸி கிரைண்டர்கள் தரமற்றவையாக இருப்பதாகக் கூறி அவற்றை அவையின் வாசலில் போட்டு உடைத்து போராட்டத்தில் ‌ஈடுபட்டனர். அவையில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றி‌யதாகத் தெரிவித்தார். புதுச்சேரியில் தனிநபர் வருவாய் உயர்ந்துள்ளதாகவும், பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளாதாகவும் அவர் கூறினார். இதையடுத்து அவையை சபாநாயகர் காலவரையரையின்றி தள்ளிவைத்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close