[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

மக்களை ஏமாற்றும் வேலை: முதலமைச்சர் ஜெயலலிதா மீது மக்கள் நலக்கூட்டணி விமர்சனம்

people-welfare-front-attacks-aiadmk-govt-for-rajiv-killers-release-issue

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய, முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசிடம் அனுமதி கோருவது மக்களை ஏமாற்றும் செயல் என மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் திருவண்ணாமலை அண்ணாசிலை உள்ளிட்ட இடங்களில், மக்கள் நலக் கூட்டணியின் மூன்றாம் கட்ட பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய, மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, 161ஆவது சட்ட விதியைப் பயன்படுத்தி, 7 பேரையும் விடுவிக்காமல், பாரதிய ஜனதா அரசிடம் மீண்டும் கருத்து தெரிவிக்குமாறு தமிழக அரசு கோருவது ஏமாற்று வேலை என்றார்.

கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நலக் கூட்டணி தமிழகத்தில் உருவானதால், திமுகவிற்கும், அதிமுகவிற்கும் கூட்டணி அமைக்க முடியாமல் ஒரு தேக்கநிலை உருவாகியுள்ளதாக தெரிவித்தார். பரப்புரைக் கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், கிரானைட் முறைகேட்டில், இரண்டு திராவிட கட்சிகளின் மீதும் கத்தி தொங்கி கொண்டிருப்பதாக கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது, தமிழகத்தில், திமுகவும், அதிமுகவும், அரசியலை வியாபாரமாக மாற்றிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close