[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது
  • BREAKING-NEWS தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் பெரும் வாக்குவாதம்: ஜால்ரா தட்டிய திமுக கவுன்சிலரை முற்றுகையிட்ட அதிமுக கவுன்சிலர்கள்

clash-between-aiamk-dmk-councillors-in-salem

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் ஜால்ரா தட்டிய திமுக கவுன்சிலரை, அதிமுக கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு, வாக்குவாதம் செய்து வெளியேற்றினர்.

சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் சவுண்டப்பன் தலைமையில் நடைபெற்றது. முதலில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து, திமுக கவுன்சிலர்கள் கேட்டுக்கொண்டவாறு, கும்பகோணம், மாகமகம் பணிக்காக சென்று உயிரிழந்த மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் பிறந்தநாள் தொடர்பாகவும், நிதிநிலை அறிக்கைத் தொடர்பாகவும், நன்றி தெரிவித்து கவுன்சிலர்கள் பேசினர். அப்போது, திமுக கவுன்சிலர் தெய்வலிங்கம் ஜால்ராவை தட்டி ஒலி எழுப்பியதோடு, முதலமைச்சர் குறித்து பேச முயன்றார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அதிமுக கவுன்சிலர்கள், திமுக உறுப்பினரை முற்றுகையிட்டு, வெளியேற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்ற திமுக உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close