வாட்ஸ் அப்பில் வைகோ பற்றி வெளியான அவதூறு செய்தி குறித்து மதிமுக சார்பில், சைபர் கிரைம் காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த செல்வராகவன் என்பவர் அளித்திருக்கும் புகாரில், கடந்த 17ஆம் தேதி பழநி - உடுமலை சாலையில் மினி லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டது குறித்த செய்தி நாளிதழ்களில் வெளியாகியுள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்ற கார் மோதிதான் அந்த இரண்டு பேர் உயிரிழந்ததாக வாட்ஸ் அப்பில் அவதூறு செய்தி பரவி வருவதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அந்தப் புகார் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி
'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு
“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்
“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்