[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: பரமன்கேணியில் புதிய பாலம் அமைக்க உத்தரவு

puthiyathalaimurai-news-help-order-to-build-new-bridge-in-paramankeni

புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக, காஞ்சிபுரம் மாவட்டம் பரமன்கேணியில் புதிய பாலம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே பரமன்கேணியிலிருந்து பக்கிங்காம் கால்வாய் குறுக்கே பழுதடைந்து ஆபத்தான நிலையில் பாலம் உள்ளது. இதை பயன்படுத்த முடியாமல் அப்பகுதி மக்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் சென்று வந்தனர்.

இதனையறிந்த புதிய தலைமுறை, தீர்வைத்தேடி பகுதியில் நேரடி ஒளிபரப்பு செய்தது. புதிய தலைமுறை செய்தி குறித்து அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சட்டபேரவையில் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து புதிதாக பாலம் கட்ட 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 18 மாதங்களில் பணிகளை முடித்திட ஒப்பந்தம் செய்துள்ளதால் அதற்கான பணியை துவங்கியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close