[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

இந்தியா சாதி வெறி பிடித்த நாடு, இந்தியாவில் இருக்க நான் விரும்பவில்லை: நீதிபதி கர்ணன்

india-caste-maniac-country-judge-karnan

இந்தியா சாதி வெறி பிடித்த நாடு, இந்தியாவில் இருக்க நான் விரும்பவில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் சென்னையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக,நீதிபதி கர்ணணுக்கு எந்த அலுவல்களும் கொடுக்க கூடாது என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தது.

நீதிபதி கர்ணண் தாமே முன்வந்து பல்வேறு உத்தரவுகள பிறப்பிப்பதாக உயர்நீதிமன்ற பதிவாளர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இதையடுத்து நீதிபதி கர்ணணுக்கு எந்த ஒரு நீதிமன்ற அலுவல்களும் கொடுக்க வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் கர்ணண் தரப்பில் ஆஜராகி வாதாடலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து சென்னையில் பேட்டியளித்த நீதிபதி கர்ணன், தன் மீதான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close