[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் மக்கள் நலக் கூட்டணி காணாமல் போய்விடும்: பொன் ராதாகிருஷ்ணன்

public-welfare-alliance-will-disappear-after-the-election-announcement-pon-radhakirushnan

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் நலக்கூட்டணி, தேர்தல் அறிவிப்புக்கு பின் காணாமல் போகும் என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதைத் தெரிவித்தார். கடந்த ஆட்சியின்போது கைவிடப்பட்ட 10 ரயில்வே திட்டங்களை மத்திய‌ அரசு நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருப்பது இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close