[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

விழுப்புரம் மாணவிகள் இறப்போடு விடுதலை சிறுத்தைகள் கட்சியை இணைத்து பேசுவது சரியல்ல: ராமதாஸுக்கு திருமாவளவன் கண்டனம்

viduthalai-chiruthaigal-party-linked-with-viluppuram-students-death-is-not-right-thirumavalavan

விழுப்புரம் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை இணைத்து பேசும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிந்தனை சிற்பி சிங்கார வேலர் சிலைக்கு மாலை அணிவித்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,விழுப்புரம் மாணவிகள் உயிரிழப்பு விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.விழுப்புரம் மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்புபடுத்தி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசுவது சரியானதல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

மக்கள் நல கூட்டணிக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் இருப்பதாக தெரிவித்த திருமாவளவன். கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கும் தேமுதிக, த.மா. காங்கிரஸ் முடிவு செய்ய வேண்டும் எனவும் ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் முறையாக நடத்தி முடிக்க கடைசி வரை தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் கொடுக்க வேண்டும் என்றும் அப்போது தான் பல முறைகேடுகள் தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close