[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களை நினைத்து மிகவும் வருந்துவதாக மம்தா பானர்ஜி என்னிடம் கூறினார் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்
  • BREAKING-NEWS ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று இரவு 9 மணிக்கு சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை 5 நாட்களுக்கு முடக்கம் - தமிழக உள்துறை
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் காவல்துறையினர் - ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு

மதுரையில் நள்ளிரவில் திமுக பிரமுகரை கொல்ல முயற்சி: வீடு, வாகனங்கள் அடித்து நொறுக்கம்

gang-try-to-kill-dmk-cadres-in-madurai

மதுரையில் திமுக பிரமுகர் குருசாமியை கொல்லும் நோக்கில் நள்ளிரவில் வந்ததாக கூறப்படும் ஒரு கும்பல் அந்த முயற்சி பலிக்காததால் அருகிலிருந்த வீடு, வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளது.

மதுரை மாநகராட்யின் திமுக பிரமுகர் குருசாமி. இவர் மீதுள்ள முன்பகை காரணமாக இவரை கொலை செய்வதற்காக திட்டமிட்டு ஒரு கும்பல் நள்ளிரவு இவரது வீட்டிற்கு வந்துள்ளது. ஆனால் தாக்க வந்த நேரத்தில் அதிர்ஷ்டவசமாக குருசாமி வீட்டில் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த 11 பேர் கொண்ட அந்த கும்பல் அருகிலிருந்த வீடு வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளது. அப்போது, அந்த வன்முறைக் கும்பலை பிடிக்க முயன்ற கீரைத்துறை காவல் ஆய்வாளர் சூரக்குமாரையும் ஆயுதங்களால் தாக்க அக்கும்பல் முயற்சித்ததாக தெரிகிறது.

இதையடுத்து போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அக்கும்பல் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. எனினும் அக்கும்பலில் இருந்த இருவர் மட்டும் போலீசார் பிடியில் சிக்கினர். அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விசாரணையில், மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டலத் தலைவரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான ராஜபாண்டி இத்தாக்குதலின் பின்னணியில் இருந்தது தெரியவந்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். முன்னாள் மண்டல தலைவரான குருசாமி மீதுள்ள முன்பகை காரணமாக அவரை கொலை செய்ய ராஜபாண்டி தரப்பு திட்டமிட்டிருந்தது தெரியவந்திருப்பதாகவும், போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close